நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே மின்சார வாகனங்களுக்கான, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது மின்சார வாகன சார்ஜரை உஙக்ள் வீட்டிலேயே நிறுவ இப்போது நீங்கள் 2,500 ரூபாய்  மட்டும் செலவழித்தால் போதும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தில்லி போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய் இது குறித்து கூறுகையில், எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷனை நிறுவ விண்ணப்பிக்கும்  முதல் 30,000 விண்ணப்பதாரர்களுக்கு 6,000 ரூபாய் மானியமாக வழங்குகிறது, இதனால் ஒவ்வொரு சார்ஜரின் விலையும் சுமார் ரூ.2,500  என்ற அளவில் இருக்கும். டெல்லி அரசின் இந்த நடவடிக்கையால் சார்ஜர்களை நிறுவதற்கான விலை 70% வரை குறையும் என்று ராய் கூறினார்.


மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும்  நகரத்தில் உள்ள பிற இடங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக மின்சார வாகனங்களுக்கு (Electric Vehicle) தனிப்பட்ட சார்ஜர்களை நிறுவ டெல்லி அரசு ரூ.2,500 மட்டுமே வசூலிக்கும். அந்த அந்த பகுதிக்கான டிஸ்காம் போர்ட்டல் மூலமாகவோ, அல்லது தனியார் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான ஹெல்ப்லைன் எண்களை அழைப்பதன் மூலமோ நுகர்வோர் பலன்களைப் பெறலாம் என்று அறிவித்தார்.


ALSO READ | ஓலா தீபாவளி சேல் துவங்குகிறது: இந்த தேதி முதல் டெஸ்ட் டிரைவ் துவக்கம்


சார்ஜர் நிறுவ விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க, முதலில் விண்ணப்பதாரர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
அரசாங்கத்தால் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சார்ஜர்களில் இருந்து உங்கள் நம்பகமான மின்சார வாகன (EV) சார்ஜரைத் தேர்வு செய்யவும்.


இதுமட்டுமின்றி, இந்த சார்ஜர்களின் விலையை ஒப்பிட்டு, ஆன்லைனில் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் ஆர்டர் செய்யலாம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த ஏழு வேலை நாட்களுக்குள் மின்சார வாகன (EV) சார்ஜரை நிறுவப்படும்.


விண்ணப்பதாரர்கள் புதிய மின்சார இணைப்பை (பிரீபெய்ட் மீட்டர் உட்பட) தேர்வு செய்யலாம் அல்லது  EV கட்டணத்தின் பலனைப் பெற ஏற்கனவே உள்ள இணைப்பைத் தொடரலாம். டெல்லி  மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிசி) துணைத் தலைவர் ஜாஸ்மின் ஷா இது குறித்து கூறுகையில், இந்தியாவில் முதல்முறையாக மால்கள், அலுவலகங்கள், குடியிருப்பு சங்கங்கள், கல்லூரிகளில் தனியார் சார்ஜர்களை நிறுவுவதற்கான சிங்கிள் விண்டோ வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த EV சார்ஜிங் பாயின்ட்கள் மூலம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டண விகிதம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.5 ஆகும்.


ALSO READ | Cheapest Electric Scooter: ரூ.50,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர்கள்