GCC Grand Tours: ஒரே விசாவில் 6 வளைகுடா நாடுகளுக்கு செல்லலாம்..!!
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்கள் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிகளை தளர்த்தியுள்ளன.
GCC Grand Tours: ஆறு இஸ்லாமிய வளைகுடா நாடுகளின் குழுவான வளைகுடா கார்ப்பரேஷன் கவுன்சில் (The Gulf Cooperation Council - GCC) 'GCC Grand Tours' என்ற புதிய சுற்றுலா விசாவை வழங்கியுள்ளது. இந்த சுற்றுலா விசாவின் உதவியுடன், சுற்றுலாப் பயணிகள் ஆறு வளைகுடா நாடுகளுக்கும் (சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார்) 30 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம். ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல்-மரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் நோக்கம் சுற்றுலாவை மேம்படுத்துவதும், அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்துவதும் ஆகும்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சி
வளைகுடா நாடுகளுக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க GCC Grand Tours Visa என்னும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே விசாவில் 6 வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடியும். இந்த விசா அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் சுற்றுலாவை அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் விசா (Schengen Visa) முறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் விசா
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், தங்கள் நாடுகளில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் ஷெங்கன் விசா வசதியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விசாவைப் பயன்படுத்தி, நீங்கள் ஷெங்கன் பகுதியில் உள்ள 27 நாடுகளுக்கும் பயணம் செய்யலாம் (ஐரோப்பவில் உள்ள 27 நாடுகளின் கூட்டுப் பகுதி ஷெங்கன் என்று அழைக்கப்படுகிறது).
மேலும் படிக்க | விருதுநகருக்கு அருகில் உள்ள எழில் கொஞ்சும் சாயல்குடி கடற்கரை...மிஸ் பண்ணாதீங்க!!
ஒற்றை விசா மூலம் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மேம்படும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி உட்பட ஆறு வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும் என்று விரும்புகின்றன, இதனால் தங்களுடைய ஹோட்டல் துறை வளரும் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக இப்பகுதி வெளிப்படுகிறது.
ஒற்றை விசா தொடர்பான பேச்சு வார்த்தை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வளைகுடா நாடுகளில் ஒற்றை விசா தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. டிசம்பர் 2023 வரை இந்த விசா தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளிடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டதாக ஓமானின் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அமைச்சர் சேலம் பின் முகமது அல் மருக் தெரிவித்தார். இந்த ஆண்டு ஏப்ரலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார அமைச்சர் அல் மரி, சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் ஒற்றை விசா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
வணிகத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்
GCC சுற்றுலா விசா வளைகுடா நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். வளைகுடா நாடுகளுக்கு 2030ம் ஆண்டுக்குள் 12.87 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்பதோடு, வணிகத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ