இந்திய இரயில்வே ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது. இருப்பினும், மக்களின் பயணத்தை எளிதாக்க ரயில்வே வழங்கும் அனைத்து சேவைகளையும் பெரும்பாலான பயணிகள் அறிந்திருப்பதில்லை. இதேபோல், பல பயணிகளுக்குத் தெரியாத மற்றும் அரிதாகப் பயன்படுத்தக்கூடிய சேவைகளில் சர்குலர் ஜர்னி டிக்கெட்டும் ஒன்றாகும். ரயில் பயணத்தில், ஒருவர் கிளம்பிய இடத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றிவிட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வரும்படி பயணத்தைத் திட்டமிட்டால் அவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் சர்க்குலர் ஜர்னி டிக்கெட் என்ற ஒரே டிக்கெட் பயணம் என்ற ஆப்ஷனை வைத்துள்ளது. இவை வழக்கமான பாயிண்ட் டொ பாயிண்டிற்காக தனித்தனியாக எடுக்கு டிக்கெட் கட்டணத்தை விட கணிசமாகக் குறைவாக இருக்கும். அனைத்து வகுப்பு பயணங்களுக்கும் இந்த சர்குலர் ஜர்னி டிக்கெட்டை வாங்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்குலர் ஜர்னி ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் எடுக்க முடியாது. மாறாக ரயில்வே துறை மண்டல தலைமை ரயில் நிலையங்களில் தான் எடுக்க முடியும். தமிழகத்த்தை பொறுத்தவரை மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற ரயில் நிலையங்களில் நேரடியாகச் சென்று ஆஃப் லைன் முறையில் டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்காக உள்ள விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் புறப்படும் நாளிலிருந்து எந்த ரயிலில் கிளம்புகிறீர்கள் எதுவரை செல்கிறீர்கள் அங்கிருந்து எந்த ரயிலுக்கு மாறுகிறீர்கள், பின்னர் எங்கெங்கு எந்த ரயிலில் எந்தெந்த நாளில் சென்று எப்பொழுது திரும்பி வருகிறீர்கள் என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.


உதாரணமாக, நீங்கள் தெற்கு இரயில்வேயில் கன்யாகுமரியில் இருந்து சர்குலர் டிக்கெட் எடுத்தால், உங்கள் பயணம் கன்யாகுமரியில் தொடங்கி கன்யாகுமரியில் முடியும். கன்யாகுமரியில் இருந்து புறப்பட்டு, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை, தில்லி என எங்கு எங்கெல்லாம் செல்ல விரும்புகிறீர்களோ அந்த வழியாக சென்று மீண்டும் கன்யாகுமரிக்கு வரலாம். சுமாஎ 7,550 கிலோமீட்டர் பயணத்திற்கான சர்குலர் ஜர்னி டிக்கெட் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


IRCTCயின் சர்குலர் ஜர்னி டிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்


1. இந்த வசதி தனித்தனியாக அல்லது குழுவாக பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்றது; குறிப்பாக யாத்திரை அல்லது சுற்றுலா பயணத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உகந்தது.


2. ரயில்வேயின் சர்குலர் ஜர்னி டிகெட் வசதி இரண்டு ஒற்றை பயணங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பயணத்தின் நீளமும் முழு பயணத்தின் பாதியாக கருதப்படுகிறது. வழக்கமான வழித்தடங்களைத் தவிர அனைத்து வழிகளிலும் அவை கிடைக்கின்றன.


3. டிக்கெட் 8 நிலையங்கள் வரை உள்ளடக்கியது.


4. தொடக்க மற்றும் முடிவு நிலையங்கள் ஒரே நிலையமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தரும் ‘5’ ரயில்கள் இவை தான்..!!


கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்


சர்குலர் ஜர்னி டிக்கெட் நீங்கள் பயணம் செய்ய அனுமதி மட்டுமே அதாவது முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்யலாம். நீங்கள் இதை வைத்து முன்பதிவு செய்ய விரும்பினால் இந்த டிக்கெட்டை வைத்து ரிசர்வேசன் கவுண்டரை அணுக வேண்டும். அங்கு நீங்கள் பயணம் செய்யும் ரயில்களில் முன்பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த முறை முன்பதிவு கட்டணமாக வெறும் முன்பதிவு, சூப்பர்ஃபாஸ்ட் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். முழு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதைச் செலுத்தினால் உங்கள் சர்க்குலர் ஜெர்னி டிக்கெட்டை வைத்துக் கொண்டு நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறிக்கொள்ள முடியும்.


சலுகை 


சர்குலர் ஜர்னி டிக்கெட்டில் ஆண் மூத்த குடிமக்களுக்கு 40% சலுகையும், பெண் மூத்த குடிமக்களுக்கு 50% சலுகையும் குறைந்த பட்சம் 1000 கிமீ தூரம் பயணிக்கும் போது வழங்கப்படுகிறது.


பிரேக் ஜர்னி


ஒரு சர்குலர் ஜர்னி டிக்கெட்டில் அதிகபட்ச பிரேக் பயணங்கள் 8 ஆக இருக்கும். வெவ்வேறு பயணங்களுக்கான முன்பதிவுக் கட்டணம், அதிவிரைவுக்கான துணைக் கட்டணம் போன்றவை கூடுதலாக விதிக்கப்படும். ஒரு பயணி உயர் வகுப்பிலோ அல்லது மேம்பட்ட வகை ரயில்களில் பயணம் செய்தாலோ, அந்த தூரத்திற்கான கட்டண வித்தியாசத்தை பாயின்ட் டு பாயிண்ட் அடிப்படையில் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | அம்ரித் பாரத் திட்டம்... உலக தரத்தில் ரயில் நிலையங்கள்... பயன்பெறும் தமிழக ரயில் நிலையங்கள் பட்டியல்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ