இந்த Credit Card மூலம் ஷாப்பிங் செய்து 5 சதவீத Cashback பெறுங்கள்
நீங்கள் இந்தக் கார்டைப் பயன்படுத்தினால், அதில் கிடைக்கும் கேஷ்பேக்கிற்கு எந்த வரம்பும் இருக்காது.
புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்யும் போக்கு வேகமாக அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. கிரெடிட் கார்டுகளின் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்குகின்றன. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
விசா பிளாட்பார்மில் கார்டு கிடைக்கிறது
நீங்கள் வழக்கமாக ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ஷாப்பிங் செய்தால், இந்த கார்டு உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஆம், இந்த கார்டு Flipkart Axis Bank கிரெடிட் கார்டு (Credit Card) ஆகும். இந்த இணை பிராண்டட் கிரெடிட் கார்டு மூலம் Flipkart இல் ஷாப்பிங் செய்தால் 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். சிறப்பு என்னவென்றால் இந்த கேஷ்பேக்கிற்கு வரம்பு இல்லை. முன்னதாக இது மாஸ்டர்கார்டுடன் தொடங்கப்பட்டது. ஆனால் நாட்டில் மாஸ்டர்கார்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், தற்போது அது விசா தளத்தில் கிடைக்கும்.
ALSO READ | SBI FD Interest Rates: SBI வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு இதோ
கேஷ்பேக்கிற்கு வரம்பு இல்லை
நீங்கள் இந்தக் கார்டைப் பயன்படுத்தினால், அதன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அதில் கிடைக்கும் கேஷ்பேக்கிற்கு எந்த வரம்பும் இல்லை. கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால் கிடைக்கும் கேஷ்பேக், பிளிப்கார்ட்டில் இயங்கும் சலுகைகளிலிருந்து வேறுபட்டது.
கார்டுக்கான தகுதி
சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவர் இந்த கார்டை எடுத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கும் அல்லது குறைந்தபட்சம் ரூ.30,000 சம்பளம் வாங்கும் நபர் சுயதொழில் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
கார்டுக்கான சிறப்பு அம்சங்கள்
- Flipkart மற்றும் Myntra இல் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால் 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக்கைப் பெறலாம்.
- Cleartrip, PVR, Uber, Swiggy, Cure.Fit, Tata 1mg மற்றும் Tata Sky ஆகியவற்றில் கார்டு மூலம் செலவழிக்க 4 சதவீத கேஷ்பேக் கிடைக்கிறது.
- வரம்பற்ற கேஷ்பேக் 1.5 சதவீதம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் பேமெண்ட்டுகளில் கிடைக்கும்.
- கார்டு வைத்திருப்பவர் ஒரு வருடத்தில் 4 விமான நிலைய லவுஞ்ச் அணுகலை இலவசமாகப் பெறலாம்.
- இந்த காரட்டை பயன்படுத்தி பெட்ரோல் பம்பில் ரூ.400 முதல் ரூ.4,000 வரை எரிபொருள் வாங்குவதற்கு 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
- இந்த கார்டில் காண்டாக்ட்லெஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு 'டேப் அண்ட் பே' வசதியையும் வழங்குகிறது.
கார்டின் கட்டணம்
கார்டில் சேர 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கார்டின் ஆண்டுக் கட்டணம் ரூ.500. ஒரு வருடத்தில் ரூ. 2 லட்சம் செலவழித்தால் ஆண்டுக் கட்டணம் திரும்ப தரப்படும்.
ALSO READ | Fixed Deposit-க்கு மிக அதிக வட்டி அளிக்கும் டாப் வங்கிகள் இவைதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR