நடிகை ஸ்ரீதேவி-ன் கடைசி படம் இதுதான்!
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி நடித்த கடைசி படமாக ஜீரோ அமைந்துள்ளது. ஷாரூக் கான், ஆலியா பட், கரீஸ்மா கபூர் ஆகியோர் நடிக்கும் ஜீரோ படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் நடிப்பதற்கு ஸ்ரீதேவி ஒப்புக் கொண்டதை அடுத்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது ஸ்ரீதேவி காலமாகி விட்டதால் அவர் நடித்த கடைசி படமாக ஜீரோ அமைந்துள்ளது. இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.