புகழ் வருவதற்கும் பிரபலமாவதற்கும் பல வகையான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு சில ராசிகளின் நட்சத்திர பலன்களின் படி அவர்களின் வாழ்க்கை எந்த மாதிரியான திருப்பங்களை எதிர்கொள்ளும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு விடுகின்றன. இது, அவர்களுக்கு பெரிய அளவில் உதவவும் செய்யும். அப்படி, பிரபலமாவதற்காகவே பிறந்த ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே பிறரை ஈர்க்கும் வகையிலான குணாதிசயம் உடையவராக இருப்பார்களாம். இவர்களின் தன்னம்பிக்கை, தைரியம், பணிவு, படைப்பாற்றல் போன்றவை பிறரை ஈர்ப்பதாக இருக்குமாம். இதுவே அவர்களை பிறரிடம் இருந்து வேறு படுத்தி காட்டுவதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இது, அவர்கள் இருக்கும் துறையில் அவர்கள் சாதிப்பதற்கும் பிரபலமாவதற்கும் உதவுகிறது. 


மேலும் படிக்க | குரு அருளால் 2024 முழுதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


 


தனுசு:


தனுசு ராசிக்காரர்கள் சாகச மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்களாம். மேலும், இவர்கள்  வாழ்க்கையின் மீது நம்பிக்கையான கண்ணோட்டத்திற்காக வைத்திருப்பர்.  அவர்களின் உற்சாகமான இயல்பு மற்றும் புதிய விஷயங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்வதற்கான திறன் அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிபெற உதவியாக இருக்கும். இவர்கள் குறிப்பாக பயணம், தத்துவம் அல்லது கல்வித் துறைகளில் சாதிக்க பல வாய்ப்புகள் உள்ளது. 


மேஷம்:


மேஷ ராசியில் பிறந்தவர்கள், தாங்கள் இருக்கும் துறைகளில் எப்போதும் முன்னேறி செல்வதற்கு ஒரு வித உந்துதலுடன் இருப்பார்களாம். இவர்கள், தங்களின் வாழ்க்கை பாதையில் எந்த தடை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயங்காதவர்களாக இருப்பார்களாம். முயற்சி செய்யாமல் எதுவும் நம் கைக்கு கிடைக்காது என நம்பும் இவர்கள், அதற்காக ஆபத்து என்று தெரிந்தும் பல முடிவுகளை எடுப்பர். ஆனால், அதற்கான நல்ல பலன்கள் இவர்களுக்கு கிடைக்கும். அவர்களின் உறுதியும் போட்டித் தன்மையும் அவர்களின் இலக்குகளை அடைய உதவும், அது அவர்களைப் பிரபலமாக்குவதற்கு உதவுகிறது.


விருச்சிகம்:


விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் தாங்கள் செய்யும் செயல்களிலும், ஈடுபடும் வேலைகளிலும் தங்களது 100 சதவிகித உழைப்பை தங்கு தடையின்றி கொடுப்பர். வாழ்க்கை குறித்த இவர்களின் புரிதல் மிகவும் பெரியதாக இருக்கும். இவர்கள் அனைவரிடமும் ஒன்று கூடி பேசி, பழகினாலும் இவர்களை சுற்றி எப்போதும் ஒரு வித மர்மம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே, இவர்கள் பக்கம் பலரை இழுக்க வைக்கும். இவர்களுக்கு கலை, ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த துறைகளில் இவர்கள் வெற்றி அடையவும் செய்வர். இது அவர்களை பிரபலமடைய செய்யும், புகழை தேடித்தரும்.


மகரம்:


மகர ராசிக்காரர்கள், தங்களுக்கென பல விதிமுறைகளை போட்டு அதற்குள் வாழ்பவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக, சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்து, தனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் இவர்கள் செய்வர். இதனால் யார் தன்னை குறை கூறினாலும் அது குறித்து கவலை படாதவர்களாக இருப்பர். இவர்களின் இந்த சுய ஒழுக்கமும், வேலையில் கவனமாக இருக்கும் குணாதிசயமும் இவர்கள் இருக்கும் துறைகளில் உயர்த்தி விட்டு பெருமை சேர்க்கும். 


மேலும் படிக்க | Venus Transit: சுக்கிரன்+ புதன் இணைப்பினால் இன்னும் 10 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ