மிஸ் யூனிவர்ஸ் 2019 பட்டத்தைத் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தட்டிச் சென்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் ஜார்ஜ் மாநிலத்தின் அட்லாண்டாவில் நேற்று மிஸ் யூனிவர்ஸ் 2019 போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 90 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தென்னாப்பிரிகாவை சேர்ந்த சொசிபினி துன்சி (26) மிஸ் யுனிவர்சாக முடிசூட்டப்பட்டார்.


இவருக்கு 2018ம் ஆண்டில் மிஸ் யுனிவர்சாக தேர்வான பிலிப்பைன்ஸ் அழகி காட்ரியோனா கிரே, மகுடத்தை சூட்டினார். பியூர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் 2வது இடத்தையும், மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.