36 வயதான் ஜகன்நாத் நேஹாஜி ஷெல்கி என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள புந்த்லிநகர் பகுதில் காய்கறி கடை நடத்தி வந்தார். இந்த கடைக்கு மின்சாரா கட்டணமாக ஒவ்வொரு மாதமும் ரூ 1000 கட்டி வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்த மாத மின்சார கட்டணம் ரூ 8.64 லட்சம் என்றும், 61,178 யூனிட்ஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று மஹாராஷ்டிரா மாநில மின்சாரம் விநியோக நிறுவனம் கடந்த வாரம் அவருக்கு ரசீதை அனுப்பி உள்ளது. இந்த ரசீதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜகன்நாத் நேஹாஜி ஷெல்கி, இது தொடர்பாக மின்சாரம் விநியோக நிறுவனத்திற்கு பலமுறை சென்றுள்ளார். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. கடும் மன உளைச்சலுக்கு உள்ளான ஜகன்நாத் நேஹாஜி, புதன்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றினர் போலீசார். அந்த கடிதத்தில், "என் தற்கொலைக்கு காரணம் அதிகமாக வந்த மின்சார கட்டணம் தான்" என எழுதி இருந்தது.


இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மின்சார பயன்பாட்டு யூனிட்ஸில் குறித்துள்ள எண்ணில் ஒரு புள்ளியை மாற்றி வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரியவந்தது. அதாவது 6,117.8 யூனிட்ஸ் (ரூ. 2,803) என்று அனுப்பவதற்கு பதிலாக 61,178 யூனிட்ஸ் என அனுப்பட்டு உள்ளது.


இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலானதால், இதனை அடுத்து மின்சாரம் விநியோக நிறுவனம் அதிகாரி சுஷில் காஷிநாத் கோலி நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என மஹாராஷ்டிரா மாநில மின்சாரம் விநியோக நிறுவனம் தெரிவித்ததுள்ளது.


ஆனால் ஜகன்நாத் நேஹாஜி ஷெல்கி குடிம்பத்தார், உரிய நியாயம் கிடைக்கும் வரை, அவரது உடலை தகனம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளனர்.