மலேசியா கோலாம்பூர் முதல் சிங்கப்பூர் வரை திட்டமிட்திருந்த அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை ரத்து செய்டுள்ளார் மலேசிய பிரதமர்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் மலேசியா பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மஹாதிர் முஹம்மது தற்போது மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சுமார் 2500 கோடி அமெரிக்க டாலர் அளவிலான கடன் சுமையில் மலேசிய அரசு சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.


முன்னாள் பிரதமர் நஜீப் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்யப் போவதாகவும் சமீபத்தில் இவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாக மஹாதிர் முஹம்மது நேற்று தெரிவித்திருந்தார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சாலை வழியாக சிங்கப்பூர் சென்றடைய சுமார் 5 மணி நேரம் பயணம் செய்யவேண்டியுள்ளது. விமானம் மூலம் ஒருமணி நேரத்தில் சென்றடையலாம் என்பதால் சிங்கப்பூர் - கோலாலம்பூர் விமானச் சேவைகள் வெகு பரபரப்பாக இயங்கி வருகின்றன.


இஇதை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு நஜீப் ரசாக் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூர் - கோலாலம்பூர் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த புல்லட் ரெயில் மூலம் சிங்கப்பூர் - கோலாலம்பூர் சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 90 நிமிடங்களில் சென்றடையலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.வரும் 2026-ம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் 1400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பரிசீலனை நடைபெற்று வந்தது.


இந்நிலையில், கோலாலம்பூர் நகருடன் சிங்கப்பூரை இணைக்கும் 350 கிலோமீட்டர் தூர புல்லட் ரெயில் திட்டத்தை ரத்து செய்வதாகவும், இது இறுதி முடிவு என்றும் மஹாதிர் முஹம்மது இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.