ஐக்கிய நாடுகளின் பிரபல Southwest Airlines நிறுவமானது, சமீபத்தில் தங்கள் விமானத்தில் இருந்து 2 வயது குழந்தை மற்றும் அவரது தந்தையினை வெளியேற்றியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிக்காகோ-வில் இருந்து அட்லாண்டா சென்ற Southwest Airlines நிறுவனத்தின் 1683 விமானத்தில் இருந்த 2 வயது குழந்தை ஒன்று அவருடைய தந்தையுடன் பாதி வழியில் விமானத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. 


இந்த நிகழ்வுகளின் பதிவுகளை அவர்களுடன் பயணித்த சக பயணி Alexis Armstrong,  தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து அந்த விமான நிறுவனம் தெரிவிக்கையில், அச் சிறுமி விமானத்தில் பயணிக்க பயந்து தனது சீட்டினில் அமராமல் தன் தந்தையின் மடியில் அமர்ந்து பயணித்தது. இதனால் விமான பணியாட்கள் இதனை கண்டித்தாகவும், இதனால் அவர் தன் மகளுடன் விமானத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளது.


ஆனால் இச்சம்பவம் குறித்து Alexis Armstrong பதிவிட்டுள்ளதாவது, தன் குழந்தையிடன் பேசி சமாதானம் செய்ய அவர் நேரம் கேட்கையில் அதற்கு மறுப்பு தெரிவித்த விமான அதிகாரிகள் அவரை வெளியேற்ற மற்றொரு அதிகாரியை அழைத்ததாலே அவர் வெளியேறினார் எனவும். அவர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே விமான ஓட்டியின் அறிப்பு மூலம், "விமானம் மீண்டும் நிலையத்திற்கு திரும்புகிறது எனவும், பயணியின் சேவை கோளாரு காரணமாக தரையிரக்கப்பட உள்ளதாகவும்" அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அனைத்து விவரங்களை குறிப்பிட்டு அவர் தனது முகப்புத்தக பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!