சமூக வலைதளங்களில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்குபெற்ற நிகழ்ச்சியில் பழமொழி ஒன்றை தவறாக கூறிய வீடியோ  வைரலாகி வந்ததுடன் தற்போது டிவிட்டர் டிரெண்ட் ஆகியும் வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எழுதிய, ‘2ஜி அவிழும் உண்மைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. 


இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து ராம், கி.வீரமணி, வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் வரியைக் கூறி மு.க.ஸ்டாலின் தனது பேச்சைத் தொடங்கினார்.


ஸ்டாலின் பேசும் போது, யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே, அது போல இந்த புத்தகம் வெளியாவதற்கு முன்னரே அவருக்கு விடுதலை கிடைத்து விட்டது.” என பேசினார்.


 



 


இவ்வாறு எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு பழமொழியை தவறாக கூறிய சம்பவம் இளைஞர்கள் மத்தியிலும் சமூக வலைதளவாசிகள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மு.க.ஸ்டாலின் கூறிய இந்த பழமொழியை கிண்டலடித்து சமூக வளைத்ததில் மீம்ஸ் போட்டு வருகிறனர்.