இந்த மாதம் முதல் வாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கூறியது, ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை தவறாகவும் பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்த ஷமி குடும்பத்தினர் பேச்சை கேட்டு என்னை கடுமையாக தாக்கினார். இவர்கள் என்னை கொல்ல முயற்சிக்கிறது. எனக்கு பல இன்னல்கள் தந்த போதிலும், நான் எனது குடும்பத்துக்காகவும், குழந்தைகாகவும் பொறுத்துக் கொண்டேன். அவர்(ஷமி) தன் தவறை திருத்திக் கொள்ளவார் என எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் அவர் திருந்தவில்லை. அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன் என செய்தியாளரிடம் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோனி எனக்கு தந்தை மாதிரி- முகமது ஷமி


இச்சம்பவத்தை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் கூறியதாவது:- 


ஹலோ, நான் முகமது ஷமி,


தற்போது நடைபெறும் சம்பவம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருக்கிறது. என் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனமும் பொய். இது எனக்கு எதிராகவும், என்னை அசிங்கபடுத்தவும், என் விளையாட்டை கெடுக்கவும்" முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.


என் மனைவி (ஹசின் ஜகான்)-ன் குற்றச்சாட்டு பொய்யானது: முகமது ஷமி!


இந்நிலையில், கடந்த 19-ம் தேதி கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த ஹசின் ஜகான், கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்ததாகவும், மேலும் பல பெண்களுடன் (அங்கிதா, மஞ்சு) தொடர்பில் இருந்ததாக கூறினார். மேலும் இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் பேச்சை கேட்டு கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். இதைக்குறித்து போலீசாரிடம் புகார் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து பொது மக்கள் மத்தியில் அடிக்க வேண்டும் எனவும் கூறினார்