2.0 - இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் ‘2.0’ இசை வரும் அக்.,27 அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது!
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’-வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ’2.0’ உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வரும் 27 அன்று வெளியாகும் எனவும், இசை வெளியீட்டு நிகழ்ச்சியானது துபாயில் நடைபெறும் எனவும், படத்தின் பாடல்களினை ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக இசையமைக்க நிகழ்சியில் வெளியாகும் எனவும் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ‘2.0’ படம் உருவாகும் வீதம் குறித்த மேக்கிங் வீடியோவினை 3டி வடிவினில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது!
இத்திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளதாக முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது, எனவே வரும் ஜனவரி எந்திரனின் மாதமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.