சென்னை: நடிகர் கமல்ஹாசன் (Kamal Hassan) "இந்தியன் 2" (Indian 2) படப்பிடிப்பின் போது பெரிய விபத்து ஏற்பட்டு அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது கிரேன்கள் விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தின் போது செட்டில் கமல்ஹாசன் இருந்தார். காயமடைந்தவர்களுடன் அவர் மருத்துவமனையில் உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி (EVP) ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். இந்த விபத்தில் மது (29), சந்திரன் (60), கிருஷ்ணா (34) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஊடக அறிக்கையின்படி, நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 


 



இந்த விபத்து குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்த கமல்ஹாசன், "எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.


 



மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.


 



இந்த படத்தைப் பற்றி பேசுகையில், எஸ்.சங்கர் இயக்குகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சி தான் இந்தியன் 2" ஆகும். சித்தார்த், காஜல் அகர்வால் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.