ஒளிப்பதிவாளராக இருந்து இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சி.பிரேம் குமார்  நம்மை பசுமை நிறைந்த பள்ளிக்கால காதலை அதன் நினைவுகளோடே கூடி சென்றார். இதனால் பல பள்ளி பருவ நட்பு வாட்ஸ்ஆப் குரூப்கள் மீண்டும் ஆக்ட்டிவேட்  ஆகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டது. அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. படத்துக்கு பக்கபலம் அதன் பின்னணி இசை,  கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு முக்கிய தூண்.  இது, 90-களில் பள்ளியில் படித்த 80s kids கள், தங்களை ராம் - ஜானுவாகவே கற்பனை செய்து கொண்டனர். மீண்டும் அவர்கள் தங்கள் பள்ளிக்கால காதலை நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.



விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, த்ரிஷா முதன்மை,ஐ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அப்லாஸ் அள்ளியது என்னவோ  அவர்களின் பள்ளி வயது வேடத்தில் ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷணும் தான்.  நாம் நம் வாழ்வில் பின்னோக்கிப் பார்த்தால், பழைய நண்பர்களை சந்தித்தால்  கண்டிப்பாக நமக்குள் ஏற்பட்ட பள்ளி காதலை தாண்டாமல் செல்லமுடியாது. அப்படி பசுமரத்தாணி போல் நம் மனதில் அழியாமல் ஒட்டியிருக்கும் முதல் காதலின் நினைவுகளை சற்று பின்னோக்கி கொண்டு சென்ற 96 படத்துக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் முக்கியமான படமாகவே அமைத்துள்ளது.


இதனால் தான் தென்னிந்திய மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட 96 தற்போது ஹிந்திக்கும் செல்கிறது.  தொழில்நுட்பம் அதிகம் ஆக்கிரமிக்காத 90களில் பள்ளி காதலை அதிக செயற்கைத்தனம் இல்லாமலும் அதேசமயம் மாண்பு குறையாமலும் தத்துரூபமாகவும், அனைவரும் அவர்களுடைய வாழ்வியலுடன் பொருத்திப் பார்க்கும் வகையில் திரைக்கதையை வடிவமைத்து அதன் காட்சிகள் வாயிலாக நம்மை அத்திரைப்படத்தின் ஒன்றைச் செய்திருந்தார் இயக்குனர் பிரேம் குமார்.



20 வருடங்களுக்குப் பிறகும் பழைய பள்ளி காதலின் நினைவுகளை சுமக்கும் காதலனும் காதலியும் என்ற சற்று பிசகினாலும் சொல்லவந்த கதையும் அதன் மாண்பும் குலைத்துவிடும். கிட்டத்தட்ட கம்பி மீது நடக்கும் வகையிலான கதையை அற்புதமாக பாராட்டும் படியாக படைத்திருந்தார் இயக்குனர்.  அதேசமயம், ராமச்சந்திரன் 22 வருடங்கள் ஜானகியை நினைத்துக் கொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது எதார்த்தத்திற்குப் புறம்பான, செயற்கையான பாத்திரப்படைப்பு என்பது இந்த படம் எதிர்கொண்ட விமர்சனங்களில் முதன்மையானது.


ஒரு காதலை இழப்பதை, வாழ்வின் இயல்பான போக்காக ஏற்று, தங்கள் வாழ்வை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொண்டவர்களும் உண்டு, ஒரு இழந்த காதலை, வாழ்வின் முடிவற்ற இருளாகக் கொண்டு தொலைந்து போனவர்களும் உண்டு.  ராமச்சந்திரன் என்ன செய்திருக்க வேண்டும் என்பது ராமச்சந்திரன் இடத்தில் நம்மை பொருத்தி பார்த்தால் தான் தெரியும்.  முதல் காதல் அதுவும் பள்ளி காதல் சுகமான நினைவுகளாக நம் நினைவுகளில் இருக்கும் வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. அதை நினைத்துப் பார்ப்பது ஒரு அலாதியான இன்பம் தான் ஆனால் அவர்கள் மீண்டும் சந்திக்காமல் இருப்பது அவர்களுக்கும் அவரை சார்ந்தோருக்கும் நன்மை பயக்கும்.


 



ALSO READ இணையத்தில் சாதனை படைத்த சந்தானத்தின் டிக்கிலோனா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR