கடந்த 2018ம் ஆண்டு சி.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ஒரு உணர்ச்சி மிகுந்த காதல் திரைப்படம் '96'.  இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி கிஷன், தேவதர்சினி, சனகராஜ், பகவதி பெருமாள், முருகதாஸ், நியாதி கடம்பி, சியாம் பிரசாத் போன்ற பலர் நடித்திருந்தனர்.  பள்ளியில் பயிலும்போது காதலர்களாக இருந்த ராம்-ஜானு, சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிட, 22 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி தோழர்களுடனான ரீயூனியனில் கலந்துகொண்டு ஒருவரையொருவர்  சந்தித்துக்கொள்ளும்போது ஏற்படும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மிரட்டலாக வெளியாகியுள்ள 'மகான்' படத்தின் டீசர்!



இப்படத்தின் பாடல்கள் யாவும் ரசிகர்களின் இதயங்களை கவரும் வகையில் அமைந்தது.  இந்த படம் பலருக்கும் அவர்களது கடந்த கால பள்ளி வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக அமைந்தது.  இப்படத்தை பார்த்த பிறகு பலரும் பள்ளி, கல்லூரி தோழர்களுடன் ரியூனியன் வைத்து ஒருவரையொருவர் சந்தித்து கொண்ட நிகழ்வெல்லாம் அரங்கேறியது.  இன்றுவரை இப்படம் பலரது விருப்ப பட்டியலில் முன்னணி வகித்து கொண்டு தான் இருக்கின்றது.  



பொதுவாக ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை வைத்து வெற்றி பெரும் படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது வழக்கம்.  அந்த வகையில் பல ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்கான கதையை இயக்குனர் பிரேம்குமார் தயார் செய்து வைத்திருப்பதாகவும், இதில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த செய்தி வெளியானதிலிருந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடிப்பார்களா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது.  மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த RRR!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR