விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.


நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 


இந்நிலையில் இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது. இதை 50 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.