பொன்னியின் செல்வன் ஏ.ஆர். ரஹ்மானுக்குள் ஏற்படுத்திய மாற்றம்...
பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த பிறகு வேறு மொழி படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டதாக் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.
இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்துவருகிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதால் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மே அல்லது ஜூனில் வெளியாகுமென்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் 'தேவராளன் ஆட்டம்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்தின் இசையை தரமாக அமைத்திருப்பதாகவும் நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்து பகிர்ந்துவருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், “இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறுகிறேன். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பார்த்த பின்னர் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது" என்றார்.
மேலும் படிக்க | அடுத்ததற்கு துணிவுடன் ரெடியான அஜித் - வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ