Aadujeevitham OTT Release : சுமார் 16 வருடங்கள் கடின உழைப்பிற்கு பிறகு உருவாகியிருக்கும் படம், ஆடு ஜீவிதம். உலக சினிமா மார்கெட்டில் தற்பாேது மலையாள படங்கள் பல சக்கைப்போடு போட்டு வருவகிறது. அப்படி, சூப்பர் ஹிட் அடிக்கும் படங்களின் லிஸ்டில் ‘ஆடு ஜீவிதம்’ படமும் இணைந்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓடிடியில் ரிலீஸ்:


திரையரங்குகளில் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே, ஓடிடி தளங்களின் பெருக்கத்தால் பல படங்கள் குறிப்பிட்ட தளங்களிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒரு சில நல்ல ஹிட் படங்களை தவிர, பெரும்பான்மையான படங்கள் ஓடிடியில் வெளியாகிவிடுகின்றன. ஆடு ஜீவிதம் படம், வசூல்-விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றிருப்பதால் இப்படம் இன்னும் ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எந்த தளத்தில், எப்போது வெளியாகிறது?


ஆடு ஜீவிதம் படத்தை, பெரிய விலைக்கு இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விற்பதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். 


ஆடு ஜீவிதம் திரைப்படம்:


மலையாள திரையுலகில் நல்ல திரைக்கதையுடன் வெளியாகும் படங்கள், உலகளவில் சூப்பர் ஹிட் அடிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம் உள்ளிட்ட படங்கள் 100 காேடியை தாண்டி வசூல் செய்திருந்தன. குறிப்பாக, மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலை தாண்டி தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த வருடத்தின் அதிக வசூல் பெற்ற மலையாள படங்களின் லிஸ்டில், ஆடு ஜீவிதம் திரைப்படமும் இணைந்திருக்கிறது.


2008ஆம் ஆண்டு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை வைத்துதான் இப்படம் உருவாகியிருக்கிறது. இதனை பலர், ‘தி கோட் லைஃப்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடிக்க, அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த நாவலை பென்யாமின்என்பவர் எழுதியிருந்தார். படத்தின் திரைக்கதையை ப்ளெஸ்ஸி எழுதி இயக்கியிருக்கிறார். 


மேலும் படிக்க | இந்தியன் 2 ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


16 வருட தவம்:


ஆடுஜீவிதம் திரைப்படத்தை கிட்டத்தட்ட 16 வருடங்களாக படமாக்கினர். பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு செல்லும் ஒருவன், குடிக்க தண்ணீர் கூட இன்றி சிரமப்படுவதும், அவனின் துயரங்களும்தான் இப்படத்தின் கதை. இதற்காக பிரித்திவிராஜ் தனது உடல் எடையை குறைத்து, உடலை வறுத்தி பல காட்சிகளில் நடித்திருக்கிறார். மிகவும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கட்டத்தில் தண்ணீர் கூட குடிக்காமல், இப்படத்தில் நடித்திருக்கிறார். 


இந்த படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது கொரோனா நோய் பரவல் அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. இதற்காக தனது உடலை தயார் செய்து வைத்திருந்த பிரித்விராஜ், கொரோனாவிற்கு பிறகு மீண்டும் தனது உடலை ட்ரான்ஸ்பார்ம் செய்தார். 


ரசிகர்கள் பலத்த வரவேற்பு..


ஆடுஜீவிதம் படத்தின் மீது பலருக்கு அபரிமிதமான எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸிற்காக காத்துக்கொண்டிருந்தனர். படக்குழுவினர் எதிர்பார்த்தது போலவே, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, உலகளவில் நேற்று வரையில் சுமார் 100 காேடி வசூலை இப்படம் கடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | தன்னை விட 12 வயது மூத்த நடிகரை காதலித்த ராஷ்மிகா! அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ