அமிர் கான், கிரண் ராவிற்கு பன்றிக் காய்ச்சல்
இந்தி முன்னணி நடிகர் அமிர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவிற்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மும்பை: இந்தி முன்னணி நடிகர் அமிர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவிற்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
பானி தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க அமிர் கான் முடிவு செய்திருந்தார். ஆனால் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பங்கேற்க முடியவில்லை.
இதையடுத்து மும்பை மக்களுக்கு வீடியோ கான்பரசிங் மூலம் உரையாற்றினார். அப்போது தானும் மனைவியும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக ஒருவாரம் வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பானி தன்னார்வ தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அமிர் கானிற்கு பதில் ஷாருக்கான் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷாருக்கான், ஆமிர் மற்றும் கிரணிற்கு மிக்க நன்றி. அவர்களை முதன்மைப்படுத்தும் இடத்தில் தான் இருப்பது பெருமை கொள்ளும் தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.