பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி!!
100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இடைப்போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தை சினேகனும், மூன்றாம் இடத்தை நடிகர் ஹரிஷ் கல்யாணும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆரவிற்கு வெற்றிக்கோப்பையும், 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.