` அச்சம் என்பது மடமையடா ` - நவம்பர் 11-ம் வெளியாகிறது
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
கெளதம் மேனன் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ' அச்சம் என்பது மடமையடா '. இப்டத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்தது. இதனை அடுத்து இந்த மாதம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.
டிரெய்லர்-1
டிரெய்லர்-2