ஆச்சி மனோரமாவின் பிறந்தநாள் இன்று:- வாழ்த்துவோம்
-
78-வது பிறந்த நாளை கானும் அவரை நினைவு கூறுவோம்:-
தனது 78 வது பிறந்த நாளை கானும் அவர் தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்.
நாடக நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பின் நாளில் ஹீரோயின், வில்லி, காமெடி நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என்று பல்வேறு துறையில் வெற்றி கொடி நாட்டினார்.
தனது திரைத்துறை பயணத்தில் ஐந்து தலைமுறையினரை சந்தித்திருக்கிறார். ஐந்து முதல்வர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
மாலையிட்ட மங்கை என்ற படத்தில் தனது திரை பயணத்தை தொடங்கி சிங்கம்-2 தான் இவர் நடித்த கடைசி படமாகும்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 1500க்கு அதிகமான படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
தனது திரைப்பயணத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், வாழ்நாள் சாதனையாளர் விருதும், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை வாங்கிருக்கிறார்.
கடந்த வருடம் 2015-ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஆச்சி என்ற சகாப்பதம் நம்மை விட்டு பிரிந்தது.
தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.
மனோரமா விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருக்கு நிகர் அவர்தான்.