தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 15ம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி, 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 22 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 11 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 4 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 28 பேரும் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 23ம் தேதி நடைபெற்றது. இதில் (Local Body Election) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஒருவரது மனு மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வேட்புமனுதாக்கல் செய்திருந்த 2 பேர் மனு என 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 


ALSO READ | தாய், தந்தை உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு


இந்நிலையில் தற்போது அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் அறிக்கைவெளியிட்டு உள்ளது. அதில்.,



சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ரசிகர்கள் / இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இது போன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.


ALSO READ | உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR