Ajith Kumar Statement Latest News Updates: நடிகர் அஜித் குமார் தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவை இரண்டும் அடுத்த ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித் குமார் பொதுவாகவே கார் பந்தயம், பைக் பந்தயத்தில் ஆர்வமிக்கவர் ஆவார். பல்வேறு காயங்களில் இருந்தும், அறுவை சிகிச்சைகளில் இருந்தும் மீண்டு வந்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததுதான். மேலும் தற்போது திரைப்படங்களில் மட்டுமின்றி கார் பந்தயத்திலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். Ajith Kumar Racing என்ற கார் பந்தய அணியை உருவாக்கி தற்போது உலகளவில் பல்வேறு கார் பந்தயங்களில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்.


2 ஆண்டுகளாக வெளியாகாத திரைப்படம்


சமீபத்தில் கூட அவர் ஸ்பெயனில் ஒரு கார் பந்தயத்தில் பங்கேற்க சென்றிருந்தார். அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதற்கு மத்தியில் அவர் திரைப்பட வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலையொட்டி துணிவு திரைப்படம் வெளியானது. அதன்பின், விக்னேஷ் சிவன் உடனான திரைப்படம் தடைப்பட அதே லைகா நிறுவனமே தயாரிக்க மகிழ் திருமேனியுடன் விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானார்.


விடாமுயற்சி படமும் நீண்ட காலமாக வெளியாகாமல் இருப்பதால் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதன் மத்தியில் சில நாள்களுக்கு முன்னர்தான் அது பொங்கலுக்கு வெளியாக இருப்பதே அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலன் குன்றியதால் சில நாள்கள் அஜித் குமார் அங்கு அனுமதிக்கப்பட்டார். இதில் இருந்து மீண்டு வந்த அஜித் விடாமுயற்சி படத்தின் பணிகளை முடித்து, அடுத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என பெயரிடப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


அஜித் திடீர் அறிக்கை


இதற்கிடையே, நடிகர் அஜித் குமார் தரப்பில் தற்போது அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா X தளத்தில் வெளியிட்டுள்ள அஜித் குமாரின் அறிக்கையில்,"சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.



எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


கடவுளே அஜித்தே கோஷம் உருவானது எப்படி?


'கடவுளே அஜித்தே' என்பது இணையத்தில் தொடங்கி தற்போது உள்நாடு, வெளிநாடு என பல பொது இடங்களில் ரசிகர்களால் இஷ்டத்திற்கு எழுப்பப்படும் கோஷமாக மாறிவிட்டது. சம்பந்தமே இல்லாத இடத்தில் கூட ஒரு சிலர் ஒன்றாக இணைந்து உரத்த குரலில் 'கடவுளே அஜித்தே' என கோஷமிடுகின்றனர். இதை இணையத்திலும் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். முதன்முதலில், ஒரு உணவகத்தில் கொத்து புரோட்டா போடும் சத்தத்தை அடிப்படையாக வைத்து ரசிகர்கள் உருவாக்கிய கோஷமே 'அஜித்தே...'. இது நாளடைவில் கடவுளே அஜித்தே என மாறிவிட்டது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ