இந்தியாவில் கொரோனா (Coronavirus) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000க்கும் அதிகமாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம் தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தொற்று (COVID-19 ) பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா (Maharashtra), கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த கொரோனா தொற்று (Coronavirus) எண்ணிக்கை தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. இதனிடையே அரசியல் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது நடிகர் அதர்வாவிற்கு (Atharvaa) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ளார். அதில்,



 



 


கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் குணமாகி பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR