10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?

தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு நடிகர் 10 நிமிட காட்சியில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்களுக்கு, தென்னிந்திய அளவில் எப்போதுமே மவுசு அதிகம். குறிப்பாக ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்களுக்கு தமிழ் திரையுலகை தாண்டி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இப்படி, அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதும் சகஜம் ஆகும். அப்படி, தமிழ் திரையுலகின் டாப் நடிகர் ஒருவர், ஒரு படத்தில் நடிக்க 10 நிமிடத்திற்கு100 கோடி சம்பளம் வாங்கினாராம். அவர் யார் தெரியுமா?
டாப் நடிகர்:
சிறு வயதில், “அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே..” என்ற பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மக்கள் முன்னிலையிலேயே திரையில் வளர்ந்து இன்று உலக நாயகனாக உயர்ந்து நிற்கும் இவர், இதுவரை 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் நடிகர்கள் அளவிற்கு ஒப்பிட்டு பேசப்படும் இவர், ஆஸ்கர் விருதுகளுக்கும் உகந்தவர் என்ற கருத்தை பலரும் ஏற்றுக்கொள்வர்.
ஒரு காட்சிக்கு மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டு, ரிஸ்க் எடுத்து 4 மணி நேரம் நடிக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட கேமராவிற்கு முன்னர் இயக்குநர் அழைக்கும் முன்பு ரெடியாகி வந்து நிற்ப்பவர் கமல். இவர், ஒவ்வொரு படத்திற்காகவும், தான் நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்காகவும் மெனக்கெட்டு இவர் எடுக்கும் விடாமுயற்சிகளும் கடின உழைப்புகளும் படத்தை பார்க்கும் மக்களுக்கு தெரியும். இப்போது 10 நிமிட காட்சிக்காக 100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நடிகரும் இவர்தான்.
மேலும் படிக்க | காதல் மன்னனாக திகழ்ந்த கமல்! முன்னாள் காதலிகளின் முழு லிஸ்ட்!
எந்த படத்திற்காக தெரியுமா?
சமீபத்தில் வெளியாகி மக்களை கவர்ந்திழுத்திருக்கும் படம், கல்கி 2898 ஏடி. இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்க, பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, தமிழ் இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில், சில நிமிடங்களே வந்திருந்தாலும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்த கதாப்பாத்திரம் வில்லனாக வந்த கமல்ஹாசனுடையதுதான். இதில் அவரது பெயர் சுப்ரீம் யாஷ்கின். களியுகத்தில் வாழும் அரக்கனுக்கு இணையான கதாப்பாத்திரமாக இருந்தது. இரண்டு பாகமாக உருவாகியிருந்த இந்த படத்தின் முதல் பாகத்தில், கமல்ஹாசன் 10 நிமிட காட்சிகளில் மட்டுமே தோன்றினார்.
இந்த 10 நிமிட காட்சிக்காக கமல் சுமார் 100 காேடியை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் இரு பாகங்களும் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதால் மொத்தமாக சேர்த்து கமல்ஹாசனுக்கு இந்த தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. 10 நிமிட காட்சிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் என சிலர் இவரை இகழ்ந்து பேசி வருகின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல, கல்கி படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களின் சம்பளமும் அதிகளவில்தான் இருக்கின்றது. ஹீரோவாக நடித்த பிரபாஸ், ஒரு படத்திற்கு சுமார் ரூ.150 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால், கல்கி படத்திற்காக அவர் அந்த தொகையை பாதியாக குறைத்து சுமார் ரூ.80 கோடி வரை சம்பளமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல அமிதாப் பச்சனுக்கு 50 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்த கமல்ஹாசன்! எந்த நடிகை தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ