இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார ஆண்டு விழாவில் நடிகர் கமல் கலந்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாச்சார ஆண்டு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் துவங்கியுள்ளது.  இந்த வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார ஆண்டு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, திரை நட்சத்திரங்கள் கமல், சுரேஷ் கோபி, குர்தாஸ் மன், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராயல் குடும்பம் என்பதால், விருந்தினர்களுக்கு பிரமாண்ட வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், இங்கிலாந்து ராணி எலிசபத்திடம் பேசினார். கமல் கடந்த 1997-ம் ஆண்டு மருதநாயம் பட துவக்க விழாவை இங்கிலாந்து ராணி எலிசபத்தை அழைத்து பிரமாண்டமாக ஆரம்பித்தார். அப்போதிருந்து அவருக்கு கமல் நன்கு பரிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.