Actor Karthik: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் ஆனார். 1980 மற்றும் 1990களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் கார்த்திக், தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் (Actor Karthik) சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
ALSO READ | உண்மை கண்டறியும் சோதனையை வைரமுத்து மேற்கொள்ள வேண்டும்- சின்மயி
இதையடுத்து தற்போது அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ALSO READ | #MeToo விவகாரம்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த பாடகி சின்மயி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR