சமீபகாலமாக பல பிரபலங்கள் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் செலுத்தி வருகின்றனர்.  அந்த வரிசையில் தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சாலை போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் செலுத்தியுள்ளது திரை வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.  ஏற்கனவே இவருக்கும் சமந்தாவிற்கு மணமுறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது.  ஹைதராபாத் போலீசார் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டொயோட்டா வெல்ஃபயர் காரில் சென்ற நாக சைதன்யா அவரது கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிமை ஒட்டியிருந்தார், இதனை கண்ட போலீசார் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பீஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்யின் கடவுள்


அதனையடுத்து கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு பிலிமை நீக்குமாறு கூறியதை, நாக சைதன்யா ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவருக்கு ரூ.750 அபராதம் விதித்தனர்.  இதை போலவே சில காலங்களுக்கு முன்னர் ஜூனியர் என்.டி.ஆர் சாலை போக்குவரத்து விதியை மீறிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  மேலும் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகர் மனோஜ் மன்சு போன்ற சில பிரபலங்களும் இதுபோன்ற வாகன சோதனையில் சிக்கி அபராதம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



நாக சைதன்யா பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் வாரிசு ஆவார்.  இவர் நடிப்பில் வெளியான மனம், மஜிலி, 100% லவ், சாஹசம் ஸ்வாசக சாகிபோ, ஜோஷ், ஓக லைலா கோசம் ஏ மாயா சேசாவே, ஆட்டோநகர் சூர்யா போன்ற இவருக்கு சிறந்த பெயரை பெற்று தந்தது.  தற்போது நாக சைதன்யா பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்து வருகிறார், 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான இந்த படத்தில் அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான், கரீனா கபூர் போன்ற பலர் நடிக்கின்றனர்.  இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க | நடிகை பாலியல் துன்புறுத்தல்... வீடியோவை பார்த்துவிட்டு டெலிட் செய்த நடிகர் திலீப்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR