ZEE5 வெப் சீரிஸ் பிளாட்பார்ம் பல வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் தங்களது ஆப்பில் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது திரவம் என்ற சீரிஸில் பிரசன்னா, இந்துஜா, கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த ராமரின் வாழ்க்கையை தழுவிய கதை. இளம் விஞ்ஞானியான ரவி பிரகாசம் (பிரசன்னா), பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கிறார். இதனால் சர்வதேச பெட்ரோலிய நிறுவனங்கள் முதல் உள்ளூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வரை அவரது வாழ்வில் எப்படி விளையாடுகிறார்கள் என்துதான் கதை.


இந்த சீரிஸை அரவிந்த் கிருஷ்ணா இயக்குகிறார். வருகிற 21ந் தேதி முதல் இதனை ZEE5 வெளியிடுகிறது.