‘டகால்டி’ திரைப்படத்தின் First Look போஸ்டர் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சந்தானம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் ஜாக்சன் இயக்கத்தில் A1 திரைப்படத்தில் நடித்து வரும் சந்தானத், இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘டகால்டி’. இத்திரைப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் பெற்ற சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன
இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்து திரைப்படங்கள் வெளியாவது தற்போது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது டகால்டி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஒரு பெங்காலி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சந்தானம் நண்பராக யோகிபாபு நடித்து வருகிறார். சந்தானமும் யோகிபாபுவும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றது. 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க விஜய்நரைன் ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை கடந்த வெள்ளி அன்று படக்குழுவினர் வெளியிட்டனர். 


வெளியான போஸ்டரில் சந்தானம் புகை பிடிப்பது போன்று காட்சி இருந்தது. எப்படி சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்குக்கு எதிர்ப்பு வந்ததோ அதே போல சந்தானத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. 



இதனையடுத்து அன்று மாலையே இரண்டாவது போஸ்டரைப் படக்குழு வெளியீட்டு இருந்தனர். இருப்பினும் முதல் போஸ்டருக்கு எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றது. இதனால் தற்போது இந்த சம்பவம் குறித்து நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில் டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது. அது புகைபிடிப்பதை  ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பலர் தெரிவித்திருந்தனர். வருங்காலத்தில் இதுபோன்ற போஸ்டர் வெளியிட மாட்டோம் என்பது உறுதியுடன் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த போஸ்டரை சந்தானம் நீக்கவில்லை.