தமிழ் சினிமாவின் நகைச்சுவையில் நடிகர் செந்தில் தவிர்க்க முடியாத அத்தியாயம். பல படங்களில் நடித்திருக்கும் செந்திலுக்கு இன்றுவரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்துவருகிறார். அப்படி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் பாபி சிம்ஹாவுடன் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். இதில் அவரது மகனான மணிகண்ட பிரபுவும் அறிமுகமாகிறார். 



அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்கும் இப்படத்துக்கு தடை உடை என்று பெயரிடப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் மணிகண்ட பிரபு அறிமுகமாகியிருக்கிறார். ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கும் இந்தப் படத்தில், மிஷா நரங், பிரபு, ரோகினி ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருப்பஹ்டக படக்குழு தெரிவித்துள்ளது. 


 



இதுகுறித்து பாபி சிம்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், செந்தில் மற்றும் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லெஜெண்ட் நடிகர் செந்தில் சார் அவர்களை வரவேற்கிறோம். மணிகண்ட பிரபு தடை உடை படத்தில் இணைந்துள்ளார். உண்மையான அப்பாவும் மகனும் ரீல் அப்பா மற்றும் மகனாக நடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ரசிகர்களுக்கு சர்பிரைஸ்! 'வாரிசு' படத்தில் ரீமிக்ஸ் ஆகும் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்!


இதனையடுத்து மணிகண்ட பிரபுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி செந்திலும், அவரது மகனும் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்தும்வருகின்றனர்.


மேலும் படிக்க | ஆண்டிரியாவுடன் பிரேக் ஆப் ஆனது ஏன்? அனிரூத் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR