இதுதான் நடிகர் சூரியின் கொரோனா தடுப்பூசி அனுபவம்
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா தடுப்பூசியும் பொதுமக்களுக்கு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இன்னமும் சற்று தயக்கம் இருந்து வருகிறது. இந்த தயக்கத்தை போக்கும் விதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ALSO READ | கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ஹரீஷ் கல்யாண்!!
இந்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை நடிகர் சூரி (Soori) பகிர்ந்துக் கொண்டார். அதில்.,
நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு; எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல்சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு,இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக என்று பதிவு செய்திருக்கிறார்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR