இன்று இளைய தளபதி விஜய் பிறந்த நாள்

விஜய் தனது பிறந்த நாளை அவர் தனது 60 வது பட ஷூட்டிங்கில் கொண்டாடினார் என தகவல்கள் வந்தது. ஆண்டு தோறும் விஜய் தன்னுடைய பிறந்த நாள் சென்னையில் கொண்டாடுவார். அதுபோல் ரசிகர்களை சந்தித்தும், பல நலத்திட்ட உதவிகளை நேரடியாக செய்வதையும் கடந்த சில வருடங்களாகவே விஜய் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் பிறந்த நாளான இன்று தன் குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் 15 நாட்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து பின்னர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தமிழகத்தில் இல்லையென்றாலும் அவர் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.