Actor Vijay Denzel Washington: நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்ட தொடங்கிவிட்டதாக தெரிகிறது. அடுத்த மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யின் டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அவர் ஏற்கெனவே விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படம் எடுத்து நல்ல வசூலையும், கவனத்தையும் பெற்றிருந்தார். தொடர்ந்து, அவரின் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியால், தமிழ் சினிமாவில் தற்போதைய தவிர்க்க முடியாத இயக்குநராக அவர் உருவெடுத்துள்ளார் எனலாம். எனவே, லோகேஷ் - விஜய் கூட்டணி மீதான எதிர்பார்ப்பில் ஏற்கெனவே உச்சத்தில் உள்ளது. 


லியோ படத்தில் விஜய்யுடன், நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்திருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு முழுமையாக காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், மற்ற கட்ட பட்டப்பிடிப்பு சென்னை பகுதிகளில் நடைபெற்றது. லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவே ரசிகர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டாலும், படத்தின் பாடலும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்துவிட்டது எனலாம். 


மேலும் படிக்க | சமந்தா-விஜய் தேவர்கொண்டா கெமிஸ்ட்ரி எப்படி..? அப்படியொரு லிப்லாக்!


தளபதி 68 அப்டேட்?


லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தின் 'நான் ரெடி' சிங்கிள் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி யூ-ட்யூப்பில் சாதனை படைத்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பு அப்படியே விஜய்யின் அடுத்த படத்தின் மீதும் திரும்பியிருக்கிறது எனலாம். விஜய் - வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லியோ படத்தின் வெளியீடு வரை இதன் மீதான அறிவிப்புகள் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டதால், படத்தின் பெயர், நடிகர்கள் விவரம் எதும் அறிவிக்கப்படவில்லை. 


அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், அவருடன் வெங்கட் பிரபு, தயாரிப்பு நிறுவனத்தினரும் பயணித்துள்ளனர். அங்கு தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட VFX பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 'University Of Southern California - Institute for Creative Technologies' என்ற VFX பணியில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்கு நடிகர் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் விசிட் அடித்துள்ளனர். 


Welcome To The Future


இங்கு தளபதி 68 படத்தின் 3D மாடலிங், விஜய்யின் பாடி ஸ்கேனிங் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது. இந்த நிறுவனம் இதற்கு முன் அவதார், ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ், ரெடி பிளேயர் ஒன் ஆகிய பெரும் பொருட்செலவில் உருவான ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜய்யின் புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இன்று சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் நடித்த Equalizer 3 படத்தை நடிகர் விஜய் திரையரங்கில் பார்ப்பதாக அவர் பகிர்ந்துள்ளார். 


ரசிகனாக மாறிய விஜய்


அதுமட்டுமின்றி, டென்சல் வாஷிங்டன் திரையில் தோன்றும் போது, விஜய் ஆர்பரித்து ரசிகமனப்பான்மையில் கொண்டாடும் தருணத்தின் புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டார். அந்த X (ட்விட்டர்) பதிவில்,"முதல் முறையாக, நம் தளபதி ரசிகர் மாறிய தருணத்தை நான் புகைப்படம் எடுத்துள்ளேன்" என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி 68 படத்தின் பூஜை இந்த மாதமும், முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதமும் நடைபெறும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Samantha: குஷி பட நாயகி சமந்தாவின் புத்தம் புது போட்டோக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ