தளபதி 66 - தெலுங்கு படமா தமிழ் படமா? விஜய் கொடுத்த அப்டேட்
தனது அடுத்த படம் நேரடி தமிழ் படம்தான் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படம் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இதனையடுத்து விஜய் தனது 66ஆவது படத்தில் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இது நேரடி தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்தது.
மேலும் படிக்க | விஜய்யின் காரில் பீஸ்ட் குழுவினர் ஜாலி ரெய்ட்: இணையத்தில் வீடியோ வைரல்
இந்நிலையில் நெல்சன் விஜய்யை எடுத்த நேர்காணலில், 66ஆவது படம் தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த விஜய், வம்சியும், தில்ராஜும் நேரடி தமிழ் படம் செய்யவே விரும்பினார்கள்.
எனவே இந்தப் படம் முழுக்க முழுக்க தமிழ் படமாகத்தான் இருக்கும். அதை டப் செய்து தெலுங்கிலும் வெளியிட இருக்கிறோம்.இருவரும் தெலுங்கு என்பதால் இந்தப் படம் தெலுங்கு படமாக இருக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் இது தமிழ் படம்தான்” என்றார்.
மேலும் படிக்க | இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகமான ஜீ மீடியாவின் மற்றுமொரு சேனல் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR