Actor Vikram Dhoni Photo: வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடிப்பதில் பெயர் பெற்றவர் நடிகர் விக்ரம். ஒரு படத்திற்காக அவர் மேற்கொள்ளும் அயராத உழைப்பை பாராட்டாதவர்கள் யாருமில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகர்களில் விக்ரமும் ஒருவர் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இவரின் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப். 28ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது. இதில், கரிகாலச் சோழன் கதாபாத்திரத்தை ஏற்று அதற்கே உரிய கச்சிதமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். காதலில் தோற்ற ஒரு இளவரசன், தனது ஆற்றாமையையும், கோபத்தையும் போரின் மூலம் தீர்த்துக்கொள்ளும் கதாபாத்திரத்தை விக்ரமை தவிர தமிழில் வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக ஏற்று நடித்திருக்க முடியாது என ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே கூறி வருகிறது. 


மேலும்  படிக்க | IPL 2023: 'நாங்கள் அதனால் தான் தோற்றோம்' - கேப்டன் தோனி கூலாக சொன்னது என்ன?


முதல் பாகத்தில், அவரின் வசனமும் பேச்சும் தமிழகமெங்கும் ஹிட் அடித்தது. அவர் நடனமாடும் "சோழா... சோழா..." பாடல் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. சமீபத்தில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியான நிலையில், அதில், ஆதித்ய கரிகாலன், நந்தினியை சந்திக்கும் ஒற்றை காட்சியை வெள்ளி திரையில் காண உலகமே காத்துக்கொண்டிருக்கிறது எனலாம். மேலும், இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' என பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். 


அந்த வகையில், நடிகர் விக்ரம் அவரது அதிகாரப்பூர்வ  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது. ஆனால், இது திரைத்துறை சம்பந்தமாக அல்ல, கிரிக்கெட் தொடர்பானது. நடிகர் விக்ரம், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். ஆனால், இந்த புகைப்படத்தை பல பேர் தற்போது பார்த்ததில்லை. 



மேலும், அந்த ட்விட்டர் பதிவில்,"எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த என்றுமே தவறியதில்லை" என விக்ரம் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படம் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என தெரியாவிட்டாலும், விக்ரம் வெறித்தனமான தோனி ரசிகர் என்பது முன்னரே அறிந்ததுதான். பல மேடைகளில், நிகழ்ச்சிகளில் விக்ரமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 


அதாவது, பல அரசியல் தலைவர்கள், நடிகர்களை விட தனது தலைவர் என்றுமே தோனிதான் என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு தோனியின் ரசிகராக அவர் தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளார். நேற்று தோனி, சிஎஸ்கேவின் கேப்டனாக 200ஆவது போட்டியில் விளையாடி சேஸிங்கில் சிக்ஸர்களை பறக்கவிட்டு, வெற்றிக்கு மிக அருகில் அழைத்து வந்தார். போட்டியில் சிஎஸ்கே தோற்றிருந்தாலும், பார்வையாளர்களின் மனங்களை தோனி வழக்கம் போல் வென்றெடுத்தார். அதையே தான் விக்ரமின் இந்த பதிவும் காட்டுகிறது. 


மேலும் படிக்க |  CSK vs RR: சொந்த மண்ணிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ