வெற்றியும், தோல்வியும் உளவியல் தாக்கத்தை உருவாக்கும் - விக்ரம் பேச்சு
ஒரு படத்தின் வெற்றியும், தோல்வியும் உளவியல் தாக்கத்தை உருவாக்கும் என நடிகர் விக்ரம் பேசியிருக்கிறார்.
டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. இதில் ஸ்ரீநிதி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஜான் விஜய், மிருணாளினி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான இசையமைத்திருக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் படமானது வெளியாகிறது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.
படம் வெளியாக இன்னும் 2 நாள்கள் மட்டுமே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில் நடிகர் விக்ரம் கோப்ரா ப்ரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்றுவருகிறார். டிக்கெட் முன்பதிவும் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' படக்குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது பேசிய விக்ரம், “உங்களுக்கு ’அந்நியன்’ படம் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் பிடிக்கும். சயின்ஸ் பிக்சன், காமெடி, எமோஷன் காட்சிகளும் இருக்கின்றன. என் படங்கள் திரையரங்கில் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டன.
இப்போது கோப்ரா வெளியாகிறது. படத்தின் வெற்றி தோல்விகள், உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படம் ரசிகர்களிடம் சென்றடையாத நேரங்களும் உண்டு. அது மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.
முன்னதாக, படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் கோப்ரா படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கினர். இதனால் தணிக்கை முடிந்ததை அறிவித்தது. ஆனாலும், என்ன சான்றிதழ் என்பதை கூறவில்லை. அதேசமயம், தயாரிப்பு நிறுவனம் யு/ஏ சான்றிதழ் பெற முயற்சித்ததாக தெரிகிறது.
மேலும் படிக்க | கோப்ரா - கடைசி நேரத்தில் கிடைத்த சர்ட்டிஃபிக்கேட்... படக்குழு நிம்மதி
தொடர் முயற்சிக்கு பிறகும், படத்தில் இடம்பெறும் நாயகனின் கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டி 'ஏ' சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என தணிக்கை குழுவினர் கடிதம் அனுப்பினர். இந்தச் சூழலில் கௌதமி தலைமையிலான ரிவைஸில் கமிட்டிக்கு படத்தை அனுப்பி வைத்தனர். அந்த குழு தற்போது கோப்ரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ