அரசியலுக்கு வருகிறேனா?... விஷால் விளக்கம்
அரசியலில் குதிக்கப்போவதாக தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார்.
ஆந்திர அரசியலில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு துருவமாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒரு துருவமாகவும் இருக்கின்றனர்.
இந்தச் சூழலில் குப்பம் தொகுதி சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி என்பதால் அங்கு அவரை தோற்கடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தின் எல்லைப் பகுதியான குப்பம் தொகுதியில் தமிழர்கள் நிறைய வசிப்பதால், அவர்கள் வாக்குகளை குறிவைக்கும் விதமாக, தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான விஷாலை ஜெகன் தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க | ஊடகங்களே என் தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள் - மீனா வேண்டுகோள்
இந்நிலையில் விஷால் இந்தத் தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர அரசியலில் நான் இறங்கப்போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிட போவதாகவும் சில வதந்திகள் பரவுவதை கேள்விப்பட்டேன். முற்றிலுமாக இந்த தகவலை மறுக்கிறேன்.
இந்த வதந்தி தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. மேலும், இதுதொடர்பாக என்னை யாரும் அணுகவில்லை. இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை.
மேலும் படிக்க | தமிழகத்தை தொடர்ந்து ஆந்திர அரசியலில் போட்டியிடும் விஷால்?
எனக்கு இப்போதைக்கு சினிமா தான் அனைத்தும். ஆந்திர அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றோ எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR