யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனையொட்டி சென்னையில் நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் யஷ், இயக்குநர் பிரசாந்த் நீல், தமிழில் வசனம் எழுதிய அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் யஷ், “தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் இந்தப் படத்தில் பணியாற்றிய சண்டைபயிற்சியாளர்கள் அன்பறிவு நேர்த்தியாக பணியாற்றினர். 


மேலும் படிக்க | மாஸ் காட்டும் அடுத்த அப்டேட்!- ரியல் ‘Beast mode’ ஸ்டார்ட்!


 


ஒரு திரைப்படத்தை உருவாக்கி டப்பிங் செய்வது கடினமான விஷயம். அதிலும் வேறு மொழிகளில் டப்பிங் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.


குறிப்பாக அந்த மொழி மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழில் வசனம் எழுதிய அசோக் அதை கேஜிஎஃப் முதல் பாகத்திலிருந்து சிறப்பாக செய்துவருகிறார். 


எனக்கு தமிழில் குரல் கொடுத்திருக்கும் சேகர் மிகச்சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.இனி நான் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேச முயற்சி செய்வேன். பாடல்கள் எழுதிய மதுரகவி ஒவ்வொரு வரிக்கும் அவ்வளவு உழைப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி” என்றார்.



அவரைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், “கே.ஜி.எஃப் படம் கேமரா, செட்களைவிட மக்களால் மட்டுமே சாத்தியமானது. கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் நடித்த அனைவருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” என பேசினார்.


மேலும் படிக்க | ‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR