விவசாயிகளுக்கு நடிகர் பிரசன்னா சிநேகா நிதியுதவி

டெல்லியில் கடந்த 41வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்துள்ளார்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் 15 பேருக்கு நடிகை சிநேகா, நடிகர் பிரசன்னா நிதியுதவி அளித்துள்ளனர். சென்னையில் விவசாயிகள் 15 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.