இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் இந்த 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொடிய கொரோனா தொற்றால் (Coronavirus) அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் ரகுல்பிரீத் சிங் (Rakul Preet Singh) கொரோனா தொற்றில் சிக்கியவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,


ALSO READ | கொரோனா நிவாரண நிதி: நடிகர் ரஜினிகாந்த் ரு.50 லட்சம் வழங்கினார்


கொரோனா தொற்றில் சிக்கினால் வலிமையாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிருங்கள். ஜீரணிக்க கடினமான உணவுகளை சாப்பிட வேண்டாம். பால், வறுத்த மற்றும் உறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.


சத்தான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சூடான தேநீர், சூப் வகைகளை சாப்பிட வேண்டாம். எளிமையான உணவுகளையே எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR