தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். கடந்த நவ. 11ஆம் தேதி சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் வசூலில் பின்னிப்பெடலெடுத்து வருகிறது. https://zeenews.india.com/tamil/topics/Samantha


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் வாரத்தை விட அடுத்தடுத்த வாரங்களில் திரையரங்குகள் நிரம்பிவழிந்தன. இதனால், சமந்தா உற்சாகமாக காணப்படுகிறார். சில நாள்களுக்கு முன், தனக்கு மயோசிடிஎஸ் என் நோய் பாதிப்பு உள்ளதாக அவர் இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். 


மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் சோர்வும், தசை வலியும் அதிகமிருக்கும் என கூறப்படுகிறது. இந்த நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைய சற்று காலமெடுக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ அவர்கள் சோர்வாகி அடிக்கடி மயக்கமிடவும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 



மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு... டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்!


இருப்பினும், உடலை பேணுவதில் மிகவும் ஆர்வமுடையவரான சமந்தா, தொடர்ந்து டாக்டர்களின் மேற்பார்வையில் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுவந்தார். அப்போதும், அவரின் கை மணிக்கட்டு பகுதியில், நரம்பில் மருந்து ஏற்றும் ட்ரிப்ஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. அந்த ட்ரிப்ஸ் கருவியுடன் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். 


இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 



மேலும், தற்போதைய அவரது உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு சிகிச்சை குறித்தும் மருத்துவமனை தரப்பில் எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை. தற்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியான நிலையில், அவர் விரைவில் நலம்பெற்று வீடுதிரும்ப அவரது ரசிகர்கள் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | கையில் ட்ரிப்ஸ்... ஜிம்மில் வொர்க் அவுட்; மாஸ் காட்டும் சமந்தா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ