Shruti Haasan Santanu Hazarika Break Up : தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், ஸ்ருதி ஹாசன். இவர், சாந்தனு ஹசாரிகா என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், இவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன்:


இந்திய திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர், நடிகர் கமல்ஹாசன். இவரது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், சிறு குழந்தையாக ‘ஹே ராம்’ படம் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, வளர்ந்து மங்கை ஆன பின்பு ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் நல்ல வெற்றியை பெற, தொடர்ந்து அவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஸ்ருதி ஹாசன், திறமையான நடிகை என்பதை தாண்டி நல்ல பாடகியாகவும் இருக்கிறார். 


சமீபத்தில் ‘இனிமேல்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுத, பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் இசையமைத்திருந்தார். இசையமைத்ததோடு மட்டுமன்றி அதில் நடித்தும், பாடியும் இருந்தார். அவருடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இதில் நடித்திருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றதை தொடர்ந்து, அவர் தொடர்ந்து தனது இசை பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 


காதல்..


நடிகை ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது, இவர்கள் தங்களின் காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் தங்கியிருந்த இவர்கள், தற்போது ஒன்றாக இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நடிகை ஸ்ருதி ஹாசனும் ஹசாரிகாவும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்து கொண்ட இவர்கள், தாங்கள் ஒன்றாக இருந்த பாேட்டோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி விட்டதால் இவர்களின் காதல் முறிவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. 


காரணம் என்ன..? 


ஸ்ருதி ஹாசனும், சாந்தனுவுன் பிரிந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இருவருக்குள்ளும் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் இவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. 
காதல் மலர்ந்தது எப்படி? 


மேலும் படிக்க | ‘அன்பே வா’ படத்திற்காக எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளம்! அந்த காலத்திலேயே அத்தனை லட்சமா!


நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் டி.எம்மில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார், சாந்தனு. இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, ஸ்ருதி தான் எழுதிய ஒரு கவிதையை சாந்தனுவிற்கு அனுப்பியிருக்கிறார். இதை பார்த்த சாந்தனு, அந்த கவிதையை வைத்து ஒரு டூடுல் (Doodle-கிறுக்கல் வரைபடம்) செய்து அனுப்பியிருக்கிறார். இதை பார்த்து கவரப்பட்ட ஸ்ருதி, தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது நாளடைவில் காதலாக மாற, இருவரும் ஒரு கட்டத்தில் லிவ்-இன் உறவில் இருக்க ஆரம்பித்தனர். 


சில மாதங்களுக்கு முன்பு, ஸ்ருதிக்கும் சாந்தனுவிற்கும் திருமணம் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இருவரையும் சந்தித்த ஒரு பாலிவுட் பிரபலம், ஸ்ருதி ஹாசனை சாந்தனுவின் மனைவி என்று கூறியதால் இந்த தகவல் பரவியது. ஆனால் ஸ்ருதி ஹாசன் தான் திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை எனவும் அப்படி ஏதேனும் நடந்தால் நானே வந்து அனைவரிடமும் கூறுகிறேன் என்றும் கூறினார். இதற்கு முன்னரே ஸ்ருதி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kalki 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ