கமல்VSஸ்ருதி: அப்பாவை மிஞ்சிய மகள்!!
அப்பா கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துதார் நடிகை ஸ்ருதிஹாசன்!
தற்போது இளைய தலைமுறைகளின் ஹீரோ-வாக விளங்குவது இணையதளம் தான்!
சமூக வலைதளங்களே இன்றைய மனித உரிமை குரல் பக்கமாக விளங்கி வருகிறது. பிரபலங்களின் படத்தின் தலைப்பிலிருந்து திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வரை அனைத்தும் ட்விட்டரில் தான் பகிர பட்டு வருகிறது. சாமானியர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் புகுந்து விளையாடும் களமாக திகழ்வதுதான் இந்த ட்விட்டர்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனை ட்விட்டரில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அவருடைய அப்பா கமலை விட பின் தொடர்வோரின் எண்ணிக்கை மகள் ஸ்ருதிஹாசனுக்கு அதிகரித்துள்ளது. கமலை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கூட தொடவில்லை. வெறும் 4.63 மில்லியன் தான்.
ஆனால், ஸ்ருதிஹாசனை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 7 மில்லியனை தாண்டியுள்ளது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'எனது ட்விட்டர் குடும்பத்திற்கு நன்றி' என ஒரு ட்ட்விட்டரை பதிவு செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் நடிகர் ரஜினியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 4.61 மில்லியன். நடிகை சமந்தாவிற்கான ஃபாலோவர்ஸ் 6.53 மில்லியன். நடிகர் தனுஷை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 7.2 மில்லியன். மலையாள நடிகர் மோகன்லாலை 5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.