சூர்யா 38: இன்று பூஜை.... நாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்
நடிகர் சூர்யா நடிக்கும் 38-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
தற்போது நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் "காப்பான்" படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள "என்ஜிகே" திரைப்படம் அடுத்த மாதம்(மே) வெளியாக உள்ளது.
இந்தநிலையில், நடிகர் சூர்யா நடிக்கும் தனது 38 வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ் அமைக்க உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.