புதுடெல்லி: பிரபாஸ் மற்றும் சைஃப் அலிகான் நடித்த ஆதிபுருஷ் திரைப்படத்தை Tanhaji புகழ் திரைப்பட இயக்குநர் ஓம் ரவுத் (Om Raut) இயக்கியுள்ளார்.பிரபாஸ் மற்றும் சைஃப் அலிகான் நடித்த ஆதிபுருஷ் தயாரிப்பாளர்கள் காலை 7:11 மணிக்கு படத்தின் முக்கியமான தகவலை பகிர்ந்துக் கொண்டனர். அது உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைப்படம் வெளியிடப்படும் என்று மெகா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் திரைப்பட வெளியீட்டின் கவுண்ட்டவுன் தொடங்கிவிடும். அதாவது இப்போதிலிருந்து கிட்டத்தட்ட 20-21 மாதங்கள் காத்திருக்க வேண்டும். 



அஜய் தேவ்கன்-சைஃப் அலி கான் நடித்த தன்ஹாஜி: தி அன்ஸங் வாரியர் (Tanhaji: The Unsung Warrior) திரைப்பட இயக்குனர் ஓம் ரவுத் தனது கதை சொல்லும் திறமையை ஏற்கனவே நிரூபித்திருப்பதால், ஆதிபுருஷ் எப்படி இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் ஆதிபுருஷ் திரைப்படத்தை மற்றுமொரு உச்ச இடத்திற்கு செல்வார் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்


சைஃப் அலி கானுடன் பணிபுரிய பிரபாஸ் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். 


"சைஃப் அலி கானுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ஒரு சிறந்த நடிகருடன் நடிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார். 


சைஃப் மட்டும் சளைத்தவரா என்ன? "ஓமி தாதாவுடன் மீண்டும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! அவருக்கு பரந்துபட்ட பார்வை மற்றும் தொழில்நுட்ப அறிவு உள்ளது, அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அவர் சினிமாவின் வரம்புகளுக்கு அப்பால் என்னை அழைத்துச் சென்றுள்ளார் அவர் Tanhaji  திரைப்படத்தை எடுத்த விதம் அதை நிரூபித்துவிட்டது. ஆதிபுருஷ்! இது ஒரு தனித்துவமான சினிமா, அதன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! வலிமைமிக்க பிரபாஸுடன் வாட்போர் புரியவும், வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!”



ஆதிபுருஷைப் பற்றி பேசிய இயக்குனர் ஓம் ரவுத் இவ்வாறு தெரிவித்திருந்தார்: “நான் பாகுபலி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து, பிரபாஸ் மீது மிகவும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவரின் திறமையால் ஈர்க்கப்பட்டேன். அவர் மிகவும் நுட்பமானவர், அவருடைய கதாபாத்திரங்களின் ஆழத்தை நாம், நம்முடன் தொடர்புபடுத்தி உணர முடியும். ஆதிபுருஷ் எனது கனவு திட்டம். ஒரு இயக்குனரின் கனவுகளை ஒரு சிறப்பான குழு இல்லாமல் நிறைவேற்ற முடியாது. எனது பார்வையை திரையில் மொழிபெயர்க்க எனக்கு உதவ பிரபாஸ் இருக்கிறார்.  ஆதிபுருஷ் தயாரிப்பாளர் பூஷன் குமார், இந்த திரைப்படத்தின் தொடக்கம் முதல்  நிபந்தனையற்ற ஆதரவுடன் எங்களுக்கு தேவையானவற்றை செய்துக் கொடுத்து தூணாக இருந்து வருகிறார். பிரபாஸ் மற்றும் சைஃப் அலி கான் என  இருவருடனும் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.”


ஆதிபுருஷைப் பற்றி இயக்குனர் ஓம் ரவுத் மேலும் கூறுகையில், “நான் பிரபாஸுடன் செட்டில் இருக்கும்போது  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திரைப்படம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவர் கதைக்களம் தொடர்பாக மிகுந்த உற்சாகத்தைக் காட்டினார். ஆதிபுருஷாக மாறுவதற்கான தயாரிப்புகளை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார். ஒரு குழுவாக நாங்கள் சிறந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவோம் என்று நம்புகிறேன்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார்.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR