Udit Narayan Son Aditya Narayan Throws Phone Of A Fan In Concert Viral Video: இசையமைப்பாளர்களும், பாடகர்களும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், பாலிவுட் பாடகர் ஒருவர், தனது இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு ரசிகரின் செல்போனை விசிறியடித்துள்ள சம்பவம் நெட்டிசன்களை கொதித்து எழ வைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போனை தூக்கியெறிந்த ரசிகர்..


பாலிவுட்டின் பிரபலமான பாடகர்களுள் ஒருவர், ஆதித்யா நாராயன். சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் உள்ளார். இவர், சதீஸ்கரில் உள்ள பிலாய் நகரில் ஒரு கல்லூரியில் இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியிருந்தார். ஷாருக்கான் நடித்திருந்த டான் படத்தில், ஆஜ் கி ராத் என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலை, ஆதித்யா பாடிக்கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நடந்துள்ளது. 


ஆதித்யா, மேடையில் நடந்து கொண்டே பாடிக்கொண்டிருக்க, மேடையை சுற்றி ரசிகர்கள் பலர் போனை காட்டி செல்பி கேட்கின்றனர். அப்படி செல்பி கேட்ட ஒரு ரசிகரின் போனை வாங்கிய (பிடுங்கிய) ஆதித்யா, அதனை கூட்டத்திற்கு நடுவே விசிறியடித்து விட்டு ஒன்றும் நடக்காதது போல தொடர்ந்து பாடல் பாட ஆரம்பித்தார். இதைப்பார்த்து சில நிமிடங்களுக்கு ஷாக் ஆன ரசிகர்கள், பின்பு அவருடன் சேர்ந்து பாடல் பாட ஆரம்பித்து விட்டனர். 



நடந்து கொண்ட முறை சரியா? 


கான்சர்ட் நடத்தும் வழக்கம், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பல்வேறு பிரபல இசையமைப்பாளர்களும் பாடகர்களும் இசை நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு வழிமுறைகளில் ரசிகர்கள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், மேடைக்கு மிக அருகில் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கான விலைதான் அதிகம். அப்படி, அதிக விலை கொடுத்து மேடையில் பாடல் பாடுபவர்களின் அருகில் நிற்கும் ரசிகர்கள் செல்ஃபி கேட்பதுண்டு. அப்படி கேட்கும் போது, மேடையில் இருக்கும் கலைஞர்களும் தங்களுக்கு பாடல் பாடாத இடம் வரும் போது செல்பி எடுத்துக்கொடுப்பர். அப்படி எடுக்க முடியாத சமயங்களில், “முடியவில்லை” என்று செய்கையாவது காண்பிப்பர். 


மேலும் படிக்க | Lal Salaam Box Office Collections: ‘லால் சலாம்’ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?


இப்படி, மேடை நாகரிகம் தெரிந்த கலைஞர்கள் அதற்கு ஏற்றவாறு மரியாதையுடன் நடந்து கொள்ள, ஆதித்யா நாராயன் இவ்வாறு செய்துள்ளது ரசிகர்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ஒரு நெட்டிசன், “இது இன்ஜினியரிங் கல்லூரியாக இருந்திருந்தால் செம்ம அடு வாங்கிக்கொண்டு அப்போதே ஓடியிருப்பார் ஆதித்யா” என்று கமெண்ட் செய்துள்ளார். அவர் இப்படி நடந்து கொண்ட முறை சரியில்லை என்றும் பலர் கமெண்டுகளில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 


இது முதல்முறையல்ல..


பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போன பிரபலங்களுள் ஒருவர், ஆதித்யா நாராயன். சில ஆண்டுகளுக்கு முன்பு விமான பணியாளரிடம் இவர் கடுமையாக வாக்குவாதம் செய்த விவகாரமும் வீடியோவாக வைரலானது குறிப்பிடத்தக்கது. 



‘இந்த’ பாடகரின் மகனா இப்படி? 


2000ஆம் ஆண்டுகளில் தமிழ் தெரியாத இந்தி பாடகர்களை கூப்பிட்டு இந்தி பாடல்களை பாட வைத்திருப்பர். அந்த பாடல்களும் பிற்காலத்தில் ஹிட் ஆகியிருக்கும். அப்படி, கோலிவுட்டில் பல ஹிட் பாடல்களை பாடியவர்களுள் ஒருவர், உதித் நாராயன். இவரது மகன்தான் ஆதித்யா நாராயன். அந்த பாடகரின் மகனா இப்படி என ரசிகர்கள் பேசி வருகின்றனர். 


மேலும் படிக்க | Vijayakanth: GOAT படத்தில் நடிக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்த்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ