12 வருடத்திற்க்கு பிறகு விஜய் - சரத்குமார் நேருக்கு நேர் மோதல்
சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு இந்த தீபாவளிக்கு விஜய் படமும், சரத்குமார் படமும் ஒரே நாளில் வெளியாகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் படம் தான் ‘மெர்சல்’. இந்த படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்து வருகிறது. அதேவேளையில் அறிமுக இயக்குனர் ஜேபிஆர் இயக்கத்தில் சரத்குமார், நெப்போலியன் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் படம் தான் ‘சென்னையில் ஒரு நாள் 2’
விஜய் படமும், சரத்குமார் படமும் ஒரே நாளில் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2005-ம் ஆண்டும் வெளியான விஜயின் ‘திருப்பாச்சி’ படமும், சரத்குமாரின் ‘ஐயா’ படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தது
சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு இந்த தீபாவளிக்கு விஜய் படமும், சரத்குமார் படமும் ஒரே நாளில் வெளியாகிறது. எந்த படம் வெற்றி பெரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.